Friday, 21 June 2013

School day poems part 2

சாலை
------------
பள்ளமும் மேடுமாய் சாலை
பள்ளிக்கு செல்லும் வேளை
பயணிக்க முடியாத சாலை
பேருந்துகள் செல்ல முடியாத அவல நிலை
பராமரிக்குமா அரசுத்துறை ?

என் உறக்கம்
-----------------------
கட்டில் மீது உறக்கம்
கனவில் உன் மீது ஏக்கம்
கலையாத கனவினால் உன்னை அடைய ஊக்கம்
அந்த ஊக்கமே என் நோக்கம்
கவனம் செல்லவில்லை படிப்பின் மீது...
கவனம் எல்லாம் உன் நினைவின் மீது...

பனித்துளிகள்
-----------------------
அதிகாலையில் பெய்த பலத்த மழை
கட்டில் (புற்கள்) மீது படுத்து இருந்தன பனித்துளிகள்
காலையில் கதிரவன் எட்டி பார்க்க
(நம்) கனவுகள் மறைவது போல மறைந்தன . . .


வேண்டும் வேண்டும்...
----------------------------------------------
மழை பெய்ய வேண்டும் – மனிதன்
மனம் குளிர வேண்டும்
புல் தழைக்க வேண்டும் -உயிர்கள்
பூமியில் வாழ வேண்டும்
இயற்கை வளர வேண்டும் – மானிடர்
இனம் நிலைக்க வேண்டும்
மரங்கள் வளர வேண்டும் – இப்புவியின்
மண் வளம் பெருக வேண்டும்
பசுமை போங்க வேண்டும் – பாரின்
மாசு நீங்க வேண்டும்
அன்பு நிலைக்க வேண்டும் – மனிதர்
பண்பு பெருக வேண்டும்

No comments:

Post a Comment