என்றும் அதிகாலை எழும் என் அன்பு தலைவி . . .
இப்போது உடல் நலமில்லாமல் படுக்கையில் . . .
தினமும் எட்டு மணி வரை விழிக்காத என் விழிகள்
இப்போது இவள் எப்போது கண் விழிப்பாள் என்று
இமைக்காமல் காத்து கிடக்கிறது . . .
உன் கை கோர்த்து நடக்க வேண்டிய நான்
உன் அருகிலேயே முடங்கி கிடக்கிறேன் . . .
நினைவில் நாம் இருவரும் சேருந்து செதுக்கிய நல்வாழ்வை
நிஜமாய் மாற்ற சீக்கிரம் எழுவாயடி . . .
விழிகளில் ஈரத்தோடு விரைவாய் சுற்றுகிறேன் எல்லா இறைவனையும்
கலப்படம் இல்லாத உன் அழகிய புன்னகையை
காலம் தடுத்தாலும் புத்துயிர் பெற்று மீண்டும் எழுவாயடி . . .
உன் கொலுசு சத்தம் கேட்கமால்
நம் மாளிகை நிசப்தமாய் உள்ளதடி . . .
பின் முற்றத்தின் துளசி செடியும் உன் துயரத்தோடு சேருந்து வாடுகிறதடி . . .
வீடு வாசல் உன் கோலம் இல்லாமல் கோரகாட்சி அளிக்குதடி . . .
நீ முகம் பார்க்கும் கண்ணாடியும் உன் முகம் தேடி அலையுதடி . . .
நீ தலை குளித்து துவட்டும் துண்டும் தலைவி இல்லாது தவிக்குதடி . . .
பூக்களின் மொட்டுகளும் கண் மூடி தவம் கிடக்கிறது உன் விரல்கள் பட . . .
நீ குடிக்கும் தண்ணீரும் கண்ணீர் வடிக்கிறது உன் பிஞ்சு நெஞ்சு அத்தனை மாத்திரைகளையும் விழுங்கும்பொழுது
. . .
விரைந்து குணமாகி உன்னால் உறைந்து கிடக்கும்
உன்னைவைகளை உனதாக்குவாய் அன்பு தலைவி . . .
#For K.Naveen
No comments:
Post a Comment