Saturday, 14 December 2013

For K.Naveen_fresher's welcome note

இளநிலை என்னும் அங்கீகாரத்தோடு 
முதுநிலை என்னும் புது அங்கிகாரம் பெற 
கணினி பொறியியல் எனும் திரைபடத்தின் இரண்டாம் பாகத்தை 
SSN என்கிற அரங்கத்தில் காண வந்துள்ள புது தோழர்களை வரவேற்கிறோம் 

அரங்கத்தில் உள்ள எங்களின் கால் தடங்களோடு புது பாதம் பதித்து இந்த (இரண்டாம் உலகம்) படத்தையும் அனுபவிக்க வாழ்த்துகிறோம் :) :)

அரங்கத்தில்  இடைவேளை நேரம் விடும் போது  எங்களுடன் சேர்ந்து படம் பற்றி அரட்டை அடிக்க அழைக்கிறோம் :D

அரங்கத்தின் அனுமதி சீட்டின் விலை உணர்ந்து எங்கள்  தோள் பிடித்து கை தட்டி படத்தை ரசிக்க வரவேற்கிறோம் . . . 

படத்தின் கலைகளையும் நுணுக்கங்களையும் கற்று புது விதிகள் எழுத உங்களுக்கு வாழ்த்துக்கள் !!!!!!

Friday, 28 June 2013

Gandhi..My school day poem for kids



காந்தியடிகள்
.....................
தேசபிதா காந்தி
தேசம் போற்றும் காந்தி
போர்பந்தரில் பிறந்த காந்தி
போரை விரும்பா காந்தி
அக்டோபரில் பிறந்த காந்தி
அஹிம்சை கொள்கை கொண்ட காந்தி 
மன உறுதி கொண்ட காந்தி 
மானிடர் மனம் மாற்றிய காந்தி 
கதர் உடுத்திய காந்தி 
கண்ணாடி அணிந்த காந்தி 
சட்டை அணியா காந்தி 
சட்டம் படித்த காந்தி 
இங்கிலாந்து சென்ற காந்தி 
இளம் வயதில் தவறுகள் செய்த காந்தி 
நெஞ்சை நிமிர்த்திய காந்தி 
நெஞ்சம் விரும்பும் காந்தி . . . 


Tuesday, 25 June 2013

Goddess of love

நாளுக்கு நாள் உன் மீதுள்ள நன் மதிப்பு பெருகுதடி உன் நினைவுகளை போல . .
இது வரை கண்டதில்லை உன் போன்ற பிழையில்லா குணம் கொண்டவளை
இனியும் உன்னை மிஞ்ச ஆளில்லை . .
தினமும் சிக்ஸர்களாய் அடித்து அழகாய் முதல் இடம் பிடித்தாய் . . .
தினமும் உனது பேச்சாலும் செய்கையாலும் ஊக்குவித்தாய் . . .
அன்பில் அன்னைக்கு நிகராய்
குணத்திலும் உணர்ச்சிகளிலும் சிறு பிள்ளையாய்
ஒய்வில்லமால் மேலும் மேலும் பறக்கிறாய் என் மனதில் . .
தனிமையும் தனியாக ரூம் போட்டு யோசிக்கும் நீ நீட்டும் நட்பின் பாலத்தால் ..
புரிந்துகொள்வதில் அன்னையாய்
புரியவைப்பதில் தந்தையாய்
மனதில் நின்றாயடி . .
சதுரங்கத்தில் ராணியின் அசைவுகளை போல
தினமும் நீ செய்யும் ஒவ்வொரு அசைவும்
என்னை உனக்கு அடிமையாக்கியது . . .
அன்பாலும் பண்பாலும் ஏணி போட்டு ஏறி என் மனதில்
அரியாசனம் இட்டுள்ள உன்னை என் உயிர் நீங்கும் வரை வீழ்த்தமுடியாதடி . . .
நிகரில்லா இடம் பிடித்த உன்னை
நகர்வலமாய் தூக்கிவரலாமடி . .
மாசில்லா மனம் கொண்ட உன்னை
மண்டியிட்டும் தொழுவலாம் தெய்வமாய் . . .


My School day poems part 3

மரங்கள்
------------

மாசு பற்ற காற்றை மனதார உள் வாங்கிகொண்டு
மனிதன் உயிர் வாழ தூய்மையான காற்றை தரும்
மரங்களை வளர்ப்போமே . . .

ஓர் நொடி
————–
கண்கள் உன்னை தேடாத நேரமில்லை
இதயம் உன்னை நினைக்காத நேரமில்லை
கைகள் உன்னைப்பற்றி எழுதாத நேரமில்லை
கால்கள் உன்னை பின் தொடராத நேரமில்லை
ஓர் நொடி இல்லையோ உன்னிடம் என்னை கவனிக்க  . . .


ஓர் படம்
————–
பழகும் பொது வருத்தமில்லை இன்பம் மட்டும் தான்
பிரியும் பொது வருத்தமில்லை
பிரிந்த பின் யோசிக்கிறேன் பிழை செய்தோனோ என்று . . .
பாதையே இல்லாமல் சென்ற எனக்கு பாதை காட்டியே பாவையே
பிரிவால் என் மனதை ஏங்க வைத்து விட்டாயே
பிரியா வரம் வேண்டி உன்னை நோக்கி மீண்டும் வருகிறேன்
வெள்ளை மனதோடு உன் கரம் கோர்க்க மட்டுமே
உன் மீது வெள்ளை துணி படர்வதை காண அல்ல. . .

Saturday, 22 June 2013

இனி ஒரு விதி செய்வோம் !!!

பதுக்கி இருக்கும் கருப்பு பணம் வேண்டும் . . .
இந்நாட்டின் கடனை அடைக்கவோ ஏழை மக்களின் துயர் துடைக்கவோ  அல்ல . . .
அணு அணுவாய் புகைப்பவர்களால் உயிர் இழக்கும் அப்பாவி மக்களை காக்க .
ஆம் !!!!
அப்பணம் கொண்டு ஒன்று மிச்சமில்லாமல் புகையிலை தோட்டத்தையும் ,சிகரெட் பெட்டிகளையும் வாங்கி தீயில் இட  வேண்டும் . . .
இங்கல்ல செவ்வாய் கிரகத்தில் . . .
கண் இருந்தும் குருடாய் வாழும் புகை மாக்களிடமிருந்து
இந்நாட்டு மாந்தர்களை காக்க வேறேதும் தோணவில்லை . . .
மாசுபட்ட காற்றை மனதால் வாங்கிகொள்ளும் இயற்கையே
இனியும் தாமிதிக்காமல் சினம் கொண்டு புகை மாக்களையும் , புகையிலை தோட்டத்தையும் வேட்டையாடு . . .
ஐந்து அறிவு மாக்களும் நல்லது கெட்டது அறியும் . . .
ஆறு அறிவு மடையர்களுக்கு மரணம் வந்தாலும் மண்டையில் உரைக்காது . . .
விழித்திடு மனிதா மின் சிகரெட்டுகளுக்கும்
விளம்பரங்கள் அடி முட்டாள்தனம்  . . .
இன்னொரு கிரகம் தேடி போகும் மனிதா
புகை மாக்களை கிரகம் கடத்தி சூரியனில் சுட்டெரியுங்கள் . . .
புதைத்தால் மறுபடியும் மண் மாசுபடும் !!!
இப்போது புரிகிறது ஏன் Environmental Engineering படிக்க வேண்டுமென்று . . .
அந்த இன்ஜினியரிங் பாடத்தை மழலைகளுக்குகூட புரிய வைக்கலாம் . . .
மூடனுக்கோ முட்டாள் புகை மாகளுக்கோ அல்ல . . .
புகை மாக்கள் இல்லா புத்தம் புது பூமி வேண்டும்
புற்றுநோய் இல்லாமல் மக்கள் தேசப்பற்றுடன் வாழ . . .
காந்தியவாதி உண்ணாவிரதம் இருந்தாலும்
காந்தி போல் சிகரெட் பிடிக்கும் புகை மாக்கள்
கண் ,வாய் ,காது மூடி இருக்கும் குரங்கு அரசு . . .
அறிவுரைகளும் பயனில்லை
அரசுக்கும் அக்கறையில்லை
பரந்த மனதோடு டாஸ்மாக் லாபத்தை
பட்டியலிட்டு காட்டும் பகுத்தறிவில்லா அரசு
தாயை போல பிள்ளையென
சுயபூத்தி இல்லா புகை மகன் . . .
இந்நாட்டு தமிழனை காப்பற்றவே வழியில்லை . . .
இதில் எங்கே இலங்கை தமிழனை காப்பாற்ற . . .
இத்தாலியில் பிறந்தவர்களுக்கு இது பற்றி என்ன கவலை . . .
மரங்களும் மறுபிரவேசம் எடுத்து வேறு கிரகம் செல்லும்
மடையா நீ வெளியிடும் புகை காற்றால்
பொறுப்பில்லாமல் புகைக்கும் மாக்களுக்கு பணம் கொடுக்கும்
பெற்றோர்களே பாசத்துடன் நீங்கள் கொடுப்பது பணமல்ல விஷம் . . .
அதுவும் உங்கள் பிள்ளைக்கு மட்டுமல்ல
உங்கள் நாட்டுக்கே !!!
மழலைகளுக்கும் ஆஸ்த்மா உண்டாக காரணமாகதீர்கள் . . .
விதிகள் பிறந்தாலும் சுயபூத்தியில்லா புகை மாக்கள் இருக்கும் வரை இந்த சமுதாயத்தின்
விதியை மாற்ற முடியாது ..............................

என் நண்பன் வேண்டுகோளுக்கு . . .

என்றும் அதிகாலை எழும் என் அன்பு தலைவி . . .
இப்போது உடல் நலமில்லாமல் படுக்கையில் . . . 
தினமும் எட்டு மணி வரை விழிக்காத என் விழிகள் 
இப்போது இவள் எப்போது கண் விழிப்பாள் என்று 
இமைக்காமல் காத்து கிடக்கிறது . . .
உன் கை கோர்த்து நடக்க வேண்டிய நான் 
உன்  அருகிலேயே முடங்கி கிடக்கிறேன் . . .
நினைவில் நாம் இருவரும் சேருந்து செதுக்கிய நல்வாழ்வை 
நிஜமாய் மாற்ற சீக்கிரம் எழுவாயடி . . .
விழிகளில் ஈரத்தோடு விரைவாய் சுற்றுகிறேன் எல்லா இறைவனையும் 
கலப்படம் இல்லாத உன் அழகிய புன்னகையை 
காலம் தடுத்தாலும் புத்துயிர் பெற்று மீண்டும் எழுவாயடி . . .
உன் கொலுசு சத்தம் கேட்கமால் 
நம் மாளிகை நிசப்தமாய் உள்ளதடி . . .
பின் முற்றத்தின் துளசி செடியும் உன் துயரத்தோடு சேருந்து வாடுகிறதடி . . .
வீடு வாசல் உன் கோலம் இல்லாமல் கோரகாட்சி அளிக்குதடி . . .
நீ முகம் பார்க்கும் கண்ணாடியும்  உன் முகம் தேடி  அலையுதடி . . .
நீ தலை குளித்து துவட்டும் துண்டும் தலைவி இல்லாது தவிக்குதடி . . .
பூக்களின் மொட்டுகளும் கண் மூடி தவம் கிடக்கிறது உன் விரல்கள் பட . . . 
நீ குடிக்கும் தண்ணீரும் கண்ணீர் வடிக்கிறது உன் பிஞ்சு நெஞ்சு அத்தனை மாத்திரைகளையும் விழுங்கும்பொழுது . . .
விரைந்து குணமாகி உன்னால் உறைந்து கிடக்கும் 
உன்னைவைகளை உனதாக்குவாய் அன்பு தலைவி . . .

#For K.Naveen

My Childhood diwali dayz

·         Every one of us like this festival. It is full of crackers and blasts. During childhood most of us could have enjoyed the most of this festival. There will be memories of those happy moments in our heart. Of course I’m gonna share one of those Diwali days I cherished the most.                   
·         My Diwali days has two phases. One to go to my village and other in our apartment. First along with my parents I used to go to my village. We used to buy crackers and guns for my relative children and other people. We will get up at early morning and used to take oil bath. Even though I don’t like to take oil bath, all will force me to do that. After praying to god, the blast of crackers will begin .Of course everyone will wear new dresses.                     
·         By the afternoon, We will return from village to our home (apartment). I really love to be in apartments. There were two blocks of apartments. We all used to burst crackers and it is the happy moment during diwali. We used to burst crackers at trees,terrace,stones etc. The whole area infront of our apartment will be of papers and crackers.                    
·         Only in evening and night , there will be much enjoyment. We used to stand in parallel and everyone will burn flower pots at same time and it will be a treat to watch. Kambi mattappu, Butterfly cracker,bijili,lakshmi,atom bomb, olai vedi, bus cracker,animal crackers, rockets, double shot, triple shot, seven shots, kuruvi vedi, gun shoot,roll caps,naatu vedi, chakras,1000 wala, flower pots, saattai and lots more were burnt. Even though at that time we had no photos of those, still it is in our heart.                   

·         After bursts, we used to watch special programs and movies in TV. Eat a lot of sweets and happiness at its best during midnight burst of crackers.Thats it.

Friday, 21 June 2013

School day poems part 2

சாலை
------------
பள்ளமும் மேடுமாய் சாலை
பள்ளிக்கு செல்லும் வேளை
பயணிக்க முடியாத சாலை
பேருந்துகள் செல்ல முடியாத அவல நிலை
பராமரிக்குமா அரசுத்துறை ?

என் உறக்கம்
-----------------------
கட்டில் மீது உறக்கம்
கனவில் உன் மீது ஏக்கம்
கலையாத கனவினால் உன்னை அடைய ஊக்கம்
அந்த ஊக்கமே என் நோக்கம்
கவனம் செல்லவில்லை படிப்பின் மீது...
கவனம் எல்லாம் உன் நினைவின் மீது...

பனித்துளிகள்
-----------------------
அதிகாலையில் பெய்த பலத்த மழை
கட்டில் (புற்கள்) மீது படுத்து இருந்தன பனித்துளிகள்
காலையில் கதிரவன் எட்டி பார்க்க
(நம்) கனவுகள் மறைவது போல மறைந்தன . . .


வேண்டும் வேண்டும்...
----------------------------------------------
மழை பெய்ய வேண்டும் – மனிதன்
மனம் குளிர வேண்டும்
புல் தழைக்க வேண்டும் -உயிர்கள்
பூமியில் வாழ வேண்டும்
இயற்கை வளர வேண்டும் – மானிடர்
இனம் நிலைக்க வேண்டும்
மரங்கள் வளர வேண்டும் – இப்புவியின்
மண் வளம் பெருக வேண்டும்
பசுமை போங்க வேண்டும் – பாரின்
மாசு நீங்க வேண்டும்
அன்பு நிலைக்க வேண்டும் – மனிதர்
பண்பு பெருக வேண்டும்

Thursday, 20 June 2013

என் இரண்டாம் தோழிக்கு…

ஆண்டுகளாய் மாறாதிருந்த என் மன வானில்
ஆர்ப்பாட்டமே இல்லாமல் அழகாய் முளைத்த நட்சத்திரம் நீயடி .
நான்கு ஆண்டுகளில் பெறாத நட்பின் ஒளியை
நிமிடங்களில் நீ பரவ செய்தாய்.
என் மன நினவேடுகளை நாட்களே இல்லாமல் நிரப்பினாய் ..
பலருக்கு புன்னகை தான் அழகு
ஆனால் உனக்கோ மனம் விட்டு சத்தம் போட்டு சிரிப்பது தான் அழகு..
எத்தனை முறை கேட்டேனோ உன் சிரிப்பை ஆனாலும் எப்போதும் திகட்டியதில்லை..
ஒரே நாளில் பல முறை re record  செய்து என் நினைவில் over write செய்கிறேன்..
சோகமான வானிலை சூழந்தாலும் உன் சிரிப்பு சட்டென்று மாற்றும் வானிலையை..
நீ விளையாட்டாய் கொபப்பட்டாலும் ஓரமாய் ஒளிந்திருக்கும் உன் புன்னகை தான் வெளியே தெரிகிறது
நீ பேசியவை பாடியவை ஆடியவை நடித்தவை
அழியாது மனதில்
அன்பான உன் நட்பு
ஆயுள் வரை நீடிக்கும்
நாட்கள் நகர்ந்தாலும்
நகராது உன் நினைவுகள்
சின்னதாய் ஓர் வருத்தம் என் முளைத்தாய் என் வாழ்வில் காலதாமதமாய்…… 

#For Jubisha

Wings of imagination

என் மன வானில்
கற்பனை சிறகுகளை பறக்க விட்டு பார்த்தேன் உன் அழகை வர்ணிக்க.
விடை கிடைக்கவில்லை …
அப்போதுதான் புரிந்தது அவையும் 
உன் அழகை கண்டு உறைந்து போனது என்று… 

நீ தமிழ் பேசும் அழகையும் உன் புன்னகையையும் கண்டு ரசிக்காத ஜீவன் இருக்காது இவ்வுலகில்.  

#For Abhitha

உன் புன்னகை

உன் புன்னகையுடன் போட்டி போட நினைத்த
புதிதாய் பூத்த பூ கூட
உன் புன்னகை கண்டு உன் கூந்தலில் ஒளிந்து கொண்டதடி… 

Needing an antivirus

Sweetie… 
Your photos and thoughts captured through my eyes (video camera) are
Replicating like a Recycler Virus in my heart (hard disk)…..
What kind of a virus U are ....!!!
Have been searching Antivirus for a long time…..
Atlast I thought of Formatting…But it has been locked by a password…

Waiting for your password girl...

Tuesday, 18 June 2013

கல் நெஞ்சக்காரி

நீ நிலாவை கூட விட்டு வைக்கவில்லையடி
அழகாய் ஒரு நாள் இருந்த முழு நிலா கூட 

உன் அழகில் விழுந்து தினமும் பிறை நிலாவாக மெலிந்து விடுகின்றதே …