Thursday, 20 June 2013

என் இரண்டாம் தோழிக்கு…

ஆண்டுகளாய் மாறாதிருந்த என் மன வானில்
ஆர்ப்பாட்டமே இல்லாமல் அழகாய் முளைத்த நட்சத்திரம் நீயடி .
நான்கு ஆண்டுகளில் பெறாத நட்பின் ஒளியை
நிமிடங்களில் நீ பரவ செய்தாய்.
என் மன நினவேடுகளை நாட்களே இல்லாமல் நிரப்பினாய் ..
பலருக்கு புன்னகை தான் அழகு
ஆனால் உனக்கோ மனம் விட்டு சத்தம் போட்டு சிரிப்பது தான் அழகு..
எத்தனை முறை கேட்டேனோ உன் சிரிப்பை ஆனாலும் எப்போதும் திகட்டியதில்லை..
ஒரே நாளில் பல முறை re record  செய்து என் நினைவில் over write செய்கிறேன்..
சோகமான வானிலை சூழந்தாலும் உன் சிரிப்பு சட்டென்று மாற்றும் வானிலையை..
நீ விளையாட்டாய் கொபப்பட்டாலும் ஓரமாய் ஒளிந்திருக்கும் உன் புன்னகை தான் வெளியே தெரிகிறது
நீ பேசியவை பாடியவை ஆடியவை நடித்தவை
அழியாது மனதில்
அன்பான உன் நட்பு
ஆயுள் வரை நீடிக்கும்
நாட்கள் நகர்ந்தாலும்
நகராது உன் நினைவுகள்
சின்னதாய் ஓர் வருத்தம் என் முளைத்தாய் என் வாழ்வில் காலதாமதமாய்…… 

#For Jubisha

No comments:

Post a Comment