பதுக்கி இருக்கும் கருப்பு பணம் வேண்டும் . . .
இந்நாட்டின் கடனை அடைக்கவோ ஏழை மக்களின் துயர் துடைக்கவோ அல்ல . . .
அணு அணுவாய் புகைப்பவர்களால் உயிர் இழக்கும் அப்பாவி மக்களை காக்க .
ஆம் !!!!
அப்பணம் கொண்டு ஒன்று மிச்சமில்லாமல் புகையிலை தோட்டத்தையும் ,சிகரெட் பெட்டிகளையும் வாங்கி தீயில் இட வேண்டும் . . .
இங்கல்ல செவ்வாய் கிரகத்தில் . . .
கண் இருந்தும் குருடாய் வாழும் புகை மாக்களிடமிருந்து
இந்நாட்டு மாந்தர்களை காக்க வேறேதும் தோணவில்லை . . .
மாசுபட்ட காற்றை மனதால் வாங்கிகொள்ளும் இயற்கையே
இனியும் தாமிதிக்காமல் சினம் கொண்டு புகை மாக்களையும் , புகையிலை தோட்டத்தையும் வேட்டையாடு . . .
ஐந்து அறிவு மாக்களும் நல்லது கெட்டது அறியும் . . .
ஆறு அறிவு மடையர்களுக்கு மரணம் வந்தாலும் மண்டையில் உரைக்காது . . .
விழித்திடு மனிதா மின் சிகரெட்டுகளுக்கும்
விளம்பரங்கள் அடி முட்டாள்தனம் . . .
இன்னொரு கிரகம் தேடி போகும் மனிதா
புகை மாக்களை கிரகம் கடத்தி சூரியனில் சுட்டெரியுங்கள் . . .
புதைத்தால் மறுபடியும் மண் மாசுபடும் !!!
இப்போது புரிகிறது ஏன் Environmental Engineering படிக்க வேண்டுமென்று . . .
அந்த இன்ஜினியரிங் பாடத்தை மழலைகளுக்குகூட புரிய வைக்கலாம் . . .
மூடனுக்கோ முட்டாள் புகை மாகளுக்கோ அல்ல . . .
புகை மாக்கள் இல்லா புத்தம் புது பூமி வேண்டும்
புற்றுநோய் இல்லாமல் மக்கள் தேசப்பற்றுடன் வாழ . . .
காந்தியவாதி உண்ணாவிரதம் இருந்தாலும்
காந்தி போல் சிகரெட் பிடிக்கும் புகை மாக்கள்
கண் ,வாய் ,காது மூடி இருக்கும் குரங்கு அரசு . . .
அறிவுரைகளும் பயனில்லை
அரசுக்கும் அக்கறையில்லை
பரந்த மனதோடு டாஸ்மாக் லாபத்தை
பட்டியலிட்டு காட்டும் பகுத்தறிவில்லா அரசு
தாயை போல பிள்ளையென
சுயபூத்தி இல்லா புகை மகன் . . .
இந்நாட்டு தமிழனை காப்பற்றவே வழியில்லை . . .
இதில் எங்கே இலங்கை தமிழனை காப்பாற்ற . . .
இத்தாலியில் பிறந்தவர்களுக்கு இது பற்றி என்ன கவலை . . .
மரங்களும் மறுபிரவேசம் எடுத்து வேறு கிரகம் செல்லும்
மடையா நீ வெளியிடும் புகை காற்றால்
பொறுப்பில்லாமல் புகைக்கும் மாக்களுக்கு பணம் கொடுக்கும்
பெற்றோர்களே பாசத்துடன் நீங்கள் கொடுப்பது பணமல்ல விஷம் . . .
அதுவும் உங்கள் பிள்ளைக்கு மட்டுமல்ல
உங்கள் நாட்டுக்கே !!!
மழலைகளுக்கும் ஆஸ்த்மா உண்டாக காரணமாகதீர்கள் . . .
விதிகள் பிறந்தாலும் சுயபூத்தியில்லா புகை மாக்கள் இருக்கும் வரை இந்த சமுதாயத்தின்
விதியை மாற்ற முடியாது ..............................