Tuesday, 22 July 2014

School day poems for kids


விடுதி வாழ்க்கை
...........................

படிக்கும் வயதில் விடுதி
பல நெறிகள் கொண்ட விடுதி
எங்கும் சிதறி கிடக்கும் புத்தகங்கள்
அங்கும் இங்கும் கேளிக்கை புத்தகங்கள்
சுவற்றில் தொங்கும் கண்ணாடி
சுத்தம் செய்யாத மின்விசிறி
குப்பையாக செய்திதாள்கள்
கும்பலாக சாப்பாட்டு தட்டங்கள்
ஒரே ஒரு மூலையில் இறைவன் படங்கள்
ஒப்பனை செய்ய பல பொருள்கள் . . .
பிரிவை தாங்குபவர்கள்
பிரியாது இருப்பவர்கள்
எங்கும் எதிலும் சந்தோஷம்
எதற்கும் அஞ்ச நெஞ்சங்கள் . . .


குடியிருப்பு --Flats
................

நான் விரும்பும் குடியிருப்பு
நன்மைகள் உள்ள குடியிருப்பு
நண்பர்கள் பல உள்ள குடியிருப்பு
வேற்றுமைகள் அகற்றும் குடியிருப்பு
கூடி  வாழ குடியிருப்பு
சாதி மதம் மொழி பாகுபடில்லா குடியிருப்பு
சாகும் வரை வேண்டும் குடியிருப்பு
மின் இணைப்பில்லா நேரம்
மின் மினி புச்சிகளுடன் விளையாட்டு







No comments:

Post a Comment