Monday, 27 March 2017

Happy birthday ammu


பாலைவன சுற்றுலாவில் இருந்து  பரிசென்ன வேண்டுமென்று கேட்டேன்
பத்திரமாய் ஊர் திரும்புங்களென்ற என் 
பங்காளியின் பாசமுள்ள முதல் உரையாடலில் 
உறைந்தேபோனேன் !!!

பொறுப்பும் பேரன்பும் ஒன்றாய் சேர்ந்து  பெண்ணாய் தேடிவந்து என்னை இல்வாழ்க்கையில்  புணர் பெயரவித்தவள் நீயடி...

அப்புறம் அப்புறமென்ற ஆனந்த பேச்சில் 
அகிலம் மறக்க செய்தாய் !!!

உனது தன்னமிபிக்கையால் என்னை தாலாட்டி 
எனது உள்ளம் ஊடுருவி 
பிள்ளையாய் தவழும் எனக்கு திறந்தாய் பல கதவுகளை....

அலைபேசியில் செல்லமாய் பப்பு  என்று  அழைத்து
அனுதினமும்  என் செல்கள் பலவற்றை தட்டி எழுப்புகிறாய் ;)

வெள்ளை மனதின் வெளிப்படை வார்த்தைகளில் 
விரைவாய் பலவற்றை புரிய வைக்கிறாய் 

காதல் மொழிகளில் கிறங்க வைக்கிறாய் அம்மு !!!
கவிபாடவாவது கனிந்து கொஞ்சம் நேரம் கொடு :P

என் மனதின் கிடங்கில் கிடந்த இன்பம் 
எனும் ஜாடியை இனிதாய் திறந்துவிட்டாய் 

வைத்த கண் சிமிட்டாது தேவதை உன் முகம் பார்த்தேன்
பாக்கெட்டில் வைத்திருந்த கண்ணாடிக்கும் கா விட்டு விட்டேன் 
என் முகம் காண நேரமில்லாமல் ....

திகட்டா அமுதமாய் தித்திக்கும் உனது சிரிப்பை
தினமும் அசை போடுகிறேன்

ரகளை பேச்சில் ரசிக்க வைக்கிறாய் 
ரம்மியமான பாடல்களில் காதல்வலை பின்னுகிறாய் 

சில நொடிகளில் சிரிக்க வைக்கிறாய் 
சின்ன சின்ன சிணுங்கல்களில் சிறை பிடிக்கிறாய் 

உன் செல்ல உரையாடல்களில் சொக்கி போகிறேன்
உன் பிணைப்பில் புத்துயிர் உணர்கிறேன்

அன்பு பரிசுகளில் பூரிப்பு அடைய வைத்தாய் 
அடியேன் என்ன தவம் செய்தேனோ !!! 

பொக்கிஷமாய் எனக்காக பிறந்தாயே 
போதாதே நான் செய்த பாக்கியமே ...

சுய  மதிப்பு ஏற்றி சுகம் தந்தாய் 
உரிமை பேச்சில் உயிர் கலந்தாய்
உனது அக்கறையை அள்ள குறையாத தீர்த்தமாய் பருகிகிறேன் 

அன்பு அம்முவோடு அழகான வாழ்வை அனுபவிக்க  
ஆசை பப்பு வையகம் விரைவாய் சுற்ற வேண்டுகிறேன் !!!

No comments:

Post a Comment